குருணாகல் போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நோயாளி ஒருவர் மீது நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொவிட் வைரஸ் தொற்று காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக, நோயாளி சிகிச்சை பெற்ற வார்டில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.