வருடத்தின் ஏனைய நாட்களை விட இந்த நாட்களில் வெப்பநிலை ஒன்று அல்லது இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இந்த நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் ஏப்ரல் இறுதி வரை இதே நிலை நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த நேரத்தில் வெப்பநிலை அசாதாரணமாக உயர்ந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் திணைக்களம் கூறுகிறது.