நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்ப நிலையுடனான காலநிலை காரணமாக தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (15) குருணாகல், இரத்தினபுரி, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்ப நிலையுடனான காலநிலை காணப்பட்டது.
நமது சருமத்திற்கு நேரடியாக படும் அதிகளவிலான சூரிய ஒளி காரணமாக இவ்வாறான நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தோல் எரிதல் , தோலில் வெள்ளைப் புள்ளிகள் தோண்றுதல் ,தோல் அரிப்பு , வியர்வையால் தோலில் ஏற்படும் கொப்புளங்கள் , தழும்புகள் போன்ற மாற்றங்கள் இந்த நோய்க்கான அறிகுறிகளாகும்.
அதிக வெப்ப நிலை காரணமாக தோல் ஒவ்வாமை ஏற்படுவதும் தற்போது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நோய்கள் குழந்தைகளிடையே ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுவதாகவும் மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமாறும் தோல் நோய் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.