2024-2025 ஆண்டுக்கான அதிபர் புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தரம் ஒன்றில் இருந்து 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் பொருளாதார நெருக்கடியுள்ள ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவுறுத்தல்களை அதிபர் நிதியத்தின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கமான www.facebook.com/president.fund மூலம் மூன்று மொழிகளிலும் பெற முடியும் என கூறப்படுகிறது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
இந்த விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 20.03.2024ஆம் திகதிக்கு முன்னதாக மாணவர்கள் தாம் கல்வி கற்கும் பாடசாலை அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதிபர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.