நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரத்திற்குள் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இதற்கென புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன் மூலமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலி இந்த வாரம் அறிமுகம் செய்ய கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதிய செயலி அறிமுகம்
குறிப்பாக புதன் அல்லது வியாழக்கிழமையில் செயலியை அறிமுகம் செய்ய ஆலோசனை நடைபெற்று வருவதோடு இதற்கான செயலி மற்றும் கடவுச்சொல் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
மேலும்,மே மாதத்திற்குள் அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து பொறுப்புகள் வழங்க தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் பத்து நாட்களில் வெளியாகும் என்றும் பொறுப்பாளர் நியமனத்திற்கு பிறகு உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.