கனேடிய தமிழ் காங்கிரஸின் நடவடிக்கைகள்மீதான கண்டனத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் கனேடிய தமிழ் கூட்டுறவின் சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது கனேடிய தமிழ் காங்கிரஸ் இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்ட இமாலயப் பிரகடனம், இனப்படுகொலையாளிகளுடன் நடாத்திய சந்திப்பு குறித்து கடும் எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டன.
இதில் கலந்துகொண்ட ஈசி24நியூஸ் ஊடகவியலாளர் என்ற வகையில் ஊடகப் போராளி கிருபா பிள்ளை ஆகிய நான் முன்வைத்த கேள்விகளை இங்கு பதிவு செய்கிறேன்.
இதற்குப் பிறகும் கனேடிய தமிழ் காங்கிரஸ் மாறாவிட்டால் என்ன செய்வீர்கள்? சட்ட நடவடிக்கை எடுப்பீர்களா என்பதை அழுத்தமாக அந்த இடத்தில் பதிவு செய்தேன்.
எல்லா மாற்றமும் ஏதோ ஒரு அழுத்தம் காரணமாகவே ஏற்படுகின்றது என்றும் ஊடகங்கள் வாயிலாக இப்படி ஒரு பிரச்ிசனை உள்ளதை மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம் என்று தமிழ் கனேடிய கூட்டுறவு சார்பில் எனது கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது.
அத்துடன், இந்தப் பிரச்சினை இரு மாதங்களுக்கு மேலாக கனேடிய தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது என்றும் கனேடிய தமிழ் பேரவையின் இயக்கத்தை மக்களும் ஊடகங்களும் நெறிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஈழத் தமிழ் மக்களின் பெரும் சக்தியான கனேடிய தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சரியாக வெளிப்படுத்த, திசைமாறிய கனேடிய தமிழ் காங்கிரஸின் பயணத்தை நெறிப்படுத்தும் எம் போராட்டம் தொடரும். தொடரட்டும்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை