போரை முடிவுக்கு கொண்டு வந்த ராஜபக்ச குடும்பம் அதன் கௌரவத்தை பெற்று நாட்டை வங்குரோத்தடைய செய்துள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாடசாலை நிகழ்வொன்றில், கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அதாவது விடுதலை புலிகளின் போரை முடிவிற்கு கொண்டு வந்த ராஜபக்ச குடும்பம் அதன் கௌரவத்தைப் பெற்று நாட்டை முழுமையாக எழுதி எடுத்துக் கொண்டவர்கள் போல பொருளாதார பயங்கரவாதத்தின் மூலம் நாட்டை வங்குரோத்தடைய செய்துள்ளதாக சஜித் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச
மேலும் மல உர மோசடி மற்றும் நானோ உர மோசடி என அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பெருமளவு பணத்தை ஏமாற்றி திருடியுள்ளதோடு வங்குரோத்தான நாட்டில் உரத்தில் ஏமாற்றி திருடிய அரசாங்கமே நாட்டை ஆண்டு வருதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்திற்குச் சென்று அவற்றை வெளிக்கொணர்ந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அதிபர் தேர்தலை நடத்த தற்போதைய அதிபர் விரும்பவில்லை என்றாலும் இது தேர்தல் வருடம் ஆகையால் இங்கு சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டுமெனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.