இந்திய அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு அஹமதாபாத்தில் அமைந்துள்ள குஜராத் மாநில அரசாங்கத்தின் கல்வித் திணைக்களத்துடன் இணைந்த i-Hub கம்பெனிக்கும் இன்று வியாழக்கிழமை (8) சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது.
மேற்படி நிறுவனம் மாணவர்களுக்கும் பயிலுனர் தொழில் முனைவோருக்கும் மதியுரைசேவைகளையும் விஞ்ஞான ஆய்வுகூடங்களை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்குகின்ற மற்றும் முதலீட்டாளர்கள் ஊடாக நிதியங்களைப் பெற்றுக்கொடுக்கின்ற புத்துருவாக்க கேந்திரநிலையமாகவே (Innovation Hub) இடையீடு செய்கின்றது.
i-Hub நிறுவனம் மாணவர்கள், புத்திஜீவிகள், கைத்தொழில்கள் மற்றும் சந்தையை ஒன்றுடனொன்று தொடர்புபடுத்தி அரச ஒழுங்குறுத்தலைக்கொண்ட வசதி வழங்குகின்ற முறைமையொன்றை அபிவிருத்தி செய்வதற்கான உபாயமார்க்க இடையீடுகளையும் செய்துவருகின்றது.
மதியுரை, வலயமாக்கல், பாவனையாளர் உறவுகள், முதலீட்டு வாய்ப்புகள், உதவிப் பொறியமைப்புகள் மற்றும் ஆய்வுகூட உட்டகட்டமைப்பு வசதிகளை வழங்குதலுடன் தொடர்புடைய துரித நெகிழ்ச்சியான மற்றும் ஒத்துழைப்புச் சேவைகளின் ஒருங்கிணைப்பாக அமைகின்ற i-Hub, தனது சேவை பெறுனர்களுக்கு அவசியமான அனைத்துச் சேவைகளையும் ஒரே கூரையின்கீழ் பூர்த்திசெய்துகொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அதன் பின்னர் அஹமதாபாத்தின் விவசாயப் பிரதேசங்களையும் விசாயத்தை அடிப்படையாகக்கொண்ட கைத்தொழில்களை பார்வையிடுதலிலும் சூரிய வலுச்சக்திக் கருத்திட்டங்களையும் உற்பத்திக் கைத்தொழில்களையும் அவதானித்தலிலும் பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழு இன்று வியாழக்கிழமை (08) இரவு கேரளா மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் (முன்னர் Trivandrum என அழைக்கப்பட்டது) நோக்கிப் பயணிக்கவுள்ளது.