கடந்தகாலங்களில் இந்திய எதிர்ப்பு கொள்கையை பின்பற்றிய ஜேவிபியின் இந்திய விஜயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை கடந்தகாலங்களில் பல இந்திய முதலீடுகளை முதலீட்டாளர்களை இழந்தமைக்கு ஜேவிபியே முக்கிய காரணம்எனஅவர் தெரிவித்துள்ளார்.
ஜேவிபியின் இந்திய எதிர்ப்புகொள்கையால் சம்பூர்மின்திட்டம் கைவிடப்பட்டமை இதற்கான ஒரு உதாரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜேவிபி தற்போது வேறு கொள்கையை பின்பற்றுகின்றது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றது இது சிறந்த விடயம என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய விஜயத்தின் பின்னர் ஜேவிபி இலங்கைக்குள் முதலீட்டாளர்கள் வருவதற்கு ஆதரவளிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.