மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது. இதன்போது மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்த அப்பாவி பொதுமக்கள் 152 பேரை கைது செய்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.
இந்த நிலையில் 37 ஆவது நினைவு தினத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெல்லாவெளி அமைப்பாளர் குமாரசிங்கம் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தியடைய நினைவு தூபியில் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.