உங்கள் தனிப்பட்ட நலன்களுக்காகவும் ஆதாயங்களுக்காகவும் எமக்காக மாண்டுபோன மாவீரர்களுக்கு துரோகம் இழைக்காதீர்கள். அது ஒருபோதும் உங்களுக்கு விமோசனத்தை தராது.
இமாலயப் பிரகடனம் என்ற பெயரில் உலகத் தமிழர் பேரவை அமைப்பும் இன்னும் சில அமைப்புக்களும் ஸ்ரீலங்கா அரசுடன் ஒப்பந்தங்களை செய்து தமிழினத்தின் போராட்டத்தை சிதைக்கும் முயற்சியில் உள்ளன.
இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை கைவிடுதல், தமிழீழத்தைக் கைவிடுதல், சுயநிர்ணய உரிமையை கைவிடுதல் என்று இப் பிரகடனம் பல துரோகங்களை சுமந்துள்ளது.
இதில் பிரித்தானியாவை சேர்ந்த சுரேன் சுரேந்திரன் என்பவர் முக்கிய பங்காளராக செயற்படுகிறார். இது உலகத் தமிழ் மக்களை பெரும் அதிருப்திக்கும் சீற்றத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.
இதில் கனேடிய தேசத்திலும் வெகு சிலர் பின்னணி வகிக்கின்றனர். அதில் ஊடகவியலாளர் என தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் திரு லோகேந்திரலிங்கமும் அடங்குகிறார்.
சுரேன் சுரேந்திரனுக்கு இவர் உறவினராய் இருப்பதில் எமக்கு எந்த விமர்சனமும் இல்லை. ஆனால் சுரேன் சுரேந்திரன் ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்து செய்யும் துரோகத்தில் இவர் உடந்தையாக இருக்கிறார் என்பதே எமது கண்டனம்.
புலத்தில் தன்னை தானே ஊடக ஆளுமை என்று பாராட்டிக்கொண்டு மற்றவர்களின் வளர்ச்சியை தடுப்பதும், மற்றவர்களை தூற்றுவதுமாக இருக்கும் இவர்கள் இத்தகைய துரோகங்களை செய்வது ஆச்சரியமல்ல.
ஆனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் .மாவீரர்களுக்கும் எமது தலைவருக்கும் இழைக்கும் வரலாற்றுத் துரோகங்களை முறியடித்து விடுதலையை வென்றெடுப்போம்.
ஊடகப் போராளி கிருபாப் பிள்ளை