நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து மேற்கொள்ளப்பட்ட குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களில் 97 வீதமானவர்கள் உத்தேச சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலைவரை குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் கலந்துகொண்ட 1531 பேரில் 1492 பேர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இலங்கையின் மக்களிற்கான தகவல்தொழில்நுட்ப துறையினர் என்ற குழுவினர் இந்த குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பை நடத்துகின்றனர்.

தகவல்தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த குறுஞ்செய்தி ஊடான சர்வஜனவாக்கெடுப்பை ஆரம்பித்துள்ளனர்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தடைசெய்யப்பட்ட அறிக்கைகளிற்காக சிறைத்தண்டனையையும் அபராதத்தையும விதிக்க முடியும்இ இந்த சட்டமூலத்தினால் எதிர்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் முடக்கப்படலாம் ஊழல் குறித்த பத்திரிகையாளர்களின் செய்தியிடல் மௌனமாக்கப்படலாம் தகவல்தொழில்நுட்ப துறை மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளலாம் என எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து தங்கள் கரிசனைகளை முன்வைத்துள்ள தகவல்தொழில்நுட்ப துறைசார்ந்தவர்கள் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த மக்களின் கருத்தை அறிவதற்காக குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பை ஆரம்பித்துள்ளனர்.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த தங்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதற்கான வாய்ப்பை பொதுமக்களிற்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.