உலகின் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கிய ஆசிய இணைய கூட்டமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்களை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இணைய கூட்டமைப்பு முன்வைத்துள்ள வேண்டுகோள்களை ஆராய்;ந்த பின்னர் உள்வாங்ககூடியளவிற்கு அவற்றை உள்வாங்க தயார் எனஅவர் தெரிவித்துள்ளார்.
முதலில் அவர்களின் பரிந்துரைகளில் எவற்றை உள்வாங்க முடியும் என பார்க்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம்நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் விரிவான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என கூகுள் மெட்டா அமேசன் உட்பட பாரிய தொழில்நுட்ப நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆசிய இணைய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆசிய இணைய கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.உத்தேசசட்டமூலம் அதன் வடிவத்தில் தற்போது பல ஆபத்துக்களை கொண்டுள்ளது என ஆசிய இணையகூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் தடை செய்யப்பட்ட அறிக்கைகள் என்பதை பரந்துபட்ட அளவில் வரையறை செய்கின்றது இணையவழி கருத்துப்பரிமாறை சட்ட விரோதமாக்குகின்றது என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தணிக்கை மற்றும் கருத்துவேறுபாடுகளை அடக்குதல் குறித்த கரிசனைகள் எழுந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளது.உத்தேச சட்டமூலத்தில் காணப்படும் குற்றங்கள் என தெரிவிக்கப்படும் விடயங்கள் பல ஏற்கனவே சட்டத்தில் உள்ளன இதன்காரணமாக சட்டநிச்சயமற்ற தன்மைதேவைக்கு அதிகமான தன்மை காணப்படுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தவறான அல்லது தீங்குஏற்படுத்தும் இணையவழி உள்ளடக்கங்களை குற்றமாக்குவது என்பது கருத்துச்சுதந்திரத்தின் மீதான கடுமையான மற்றும் தேவையற்ற தடையாகும் எனவும் என ஆசிய இணைய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு என்ற கட்டமைப்பு குறித்து புதிய சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு இது அரசியல் தலையீடுகள் அதிகார துஸ்பிரயோகம் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் வளர்ச்சியடைந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என தெரிவித்துள்ள பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டுப்பாட்டு சட்டங்கள் புத்தாக்கத்தையும் முதலீட்டையும் பாதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளன.