கொழும்பு மட்டக்குளி, ரந்திய உயன வீடமைப்புத் திட்டத்துக்கு அருகில் நேற்று (15) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “புகுடு கண்ணா”வின் போதைப்பொருள் வலையமைப்பின் பணப் பரிவர்த்தனைகளை நிர்வகித்தவர்களில் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டியில் வந்த மூன்று இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு 8.30 மணியளவில் ‘படா ரஞ்ஜி’ என அழைக்கப்படும் செந்தில் ஆறுமுகம் துஷ்யந்த் மீது என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அவரது மார்பு மற்றும் இடது கையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள எதிர்தரப்பு கும்பலால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு-வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.