காசாவின் தென்பகுதியில் இஸ்ரேலிய படையில்டாங்கி தளபதியாக பணியாற்றிய அவுஸ்திரேலியாவை சேர்ந்த லயர் சிவன் என்பவர் மோதலின் போது உயிரிழந்துள்ளார்.
டிசம்பர் 19ம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து தற்போதே தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹமாசிற்கு எதிரான இஸ்ரேலிய படையினரின் தாக்குதலின்போது காசாவில் உயிரிழந்த முதலாவது அவுஸ்திரேலியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒக்டோபர் ஏழாம்திகதிஹமாஸ் மேற்கொண்டதாக்குதலின் பின்னர் இஸ்ரேலிய இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்ததை தொடர்ந்து சிவனை அழைத்திருந்தனர்.
அதன் பின்னர் அவர் காசாவிலேயே அவர் நீண்டநாட்கள் அவர் காசாவில் ஹமாசிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அவரது மனைவி லியாவ் கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களிற்கு இரண்டு வயது மகன் ஒருவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது மகன் இஸ்ரேலை பாதுகாக்கவேண்டும் என்ற அர்ப்பணிப்புடன்காணப்பட்டார் என சிவனின் தந்தை டன் சிவன் தெரிவித்துள்ளார்.
எனது மகன் வாழ்க்கை வாழ்க்கை இயற்கை போன்றவற்றை நேசித்த போதிலும் நாட்டை மக்களை பாதுகாக்கவேண்டியது அவசியம் என கருதினார் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
சுயபாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்த கப்டன் சிவன் பணியில் இணையுமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு உடனடியாக பதிலளித்தார் என தெரிவித்துள்ள அவரது தந்தை காசாவின் தென்பகுதியில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் எனவும்குறிப்பிட்டுள்ளார்.
தனது மகன் எவ்வாறு ஏனைய படையினரை காப்பாற்றினார் என்பதை தந்தை விபரித்துள்ளார்.
கப்டன்சிவன் டாங்கியில் அமர்ந்திருந்தார்இஅவ்வேளை டாங்கிக்குஅருகில் ஹமாஸ் வீரர் ஒருவர் வெடிபொருளை வைப்பதை அவர் பார்த்தார் தனது சகாக்களை காப்பாற்றுவதற்காக டாங்கியிருந்து எதிரியை தாக்கமுயன்றவேளை தனது உயிரை பறிகொடுத்தார் என தந்தை தெரிவித்துள்ளார்.
அவர் தனது மகன் மனைவிகுறித்துசிந்திக்கவில்லை என அவர் தெரிவித்துள்hர்
அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவை தாக்கியுள்ள கடும் புயல் காரணமாக 50இ000 மேற்பட்டவீடுகளும் வர்த்தக நிலையங்களும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருளில் சிக்குண்டுள்ளன.
இதன் காரணமாக மெல்பேர்ன் விமானநிலையத்தின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
உடனடி ஆபத்து நீங்கிவிட்டது எனினும் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதாக வானிலை அவதானநிலையம் தெரிவித்துள்ளது.