பெறுமதி சேர் வரி (VAT) 18 சதவீதமாக அதிகரித்த பின்னர் எரிபொருட்களின் விலை அதிகரிக்குமானால் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவிக்கையில்,
ஜனவரி மாதம் முதல் எரிபொருட்களின் விலை 50 ரூபாவிற்கும் அதிகமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இடம்பெற்றால் எரிபொருட்களின் விலைக்கு ஏற்ப கிலோமீட்டருக்கான கட்டணம் அதிகரிக்கப்படும்.
எரிபொருட்களின் விலை அதிகரித்த சந்தர்ப்பங்களில் எமது சங்கம் கட்டணங்கள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இம்முறை நாம் எரிபொருட்களின் விலைக்கு ஏற்ப கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் எடுத்துள்ளோம் என்றார்.