இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4097 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (டிச.28) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் இருவரும் கர்நாடகா கேரளா மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியில் தலா ஒரு நபரும் என 6 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கின்றனர்.
புதிதாக பரவி வரும் கரோனா ஜேஎன்.1 திரிபு வைரஸ் குளிர் காலத்துக்கு பிறகு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில்இ டிசம்பர் 26-ல் வெளியான தகவல்படிஜேஎன்.1 திரிபு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109- எட்டியுள்ளது. இந்த பாதிப்பால் கர்நாடகா கேரளா கோவா குஜராத் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஜேஎன்.1 திரிபு வைரஸ் எளிதில் பரவக் கூடியது என்றும் இது முதலில் குளிர் போன்ற லேசான அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றும்இ அதன் பிறகு மேல் சுவாசக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தமிழக நிலவரம் என்ன? – தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி மதுரை திருச்சி கோவை திருவள்ளூர் மாவட்டத்தில் தலா ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
“தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் இறுதியில் எடுக்கப்பட்ட 56 மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு இருந்தது. அதில் 30 மாதிரிகளின் முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. ஏற்கெனவே சமூகத்தில் பரவியிருக்கும் எக்ஸ்பிபி வகை கொரோனா24 பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இருவருக்கு பிஏ.1 வகை பாதிப்பு இருந்தது உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் திருச்சி மதுரை கோவை திருவள்ளுர் மாவட்டங்களைச் சேர்ந்த 4 பேருக்கு ஜேஎன்1 வகை கரோனா இருந்தது தெரியவந்தது. அவர்கள் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை. கர்ப்பிணிகள் முதியோர் இணை நோயாளிகள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். மரபணு பகுப்பாய்வுக்கு தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட மேலும் 96 மாதிரிகளின் முடிவுகள் அடுத்த சில நாட்களில் வெளியாகும்” என்று அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது “புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் 26 மாதிரிகளின் முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை. அதேபோல் மாநில பொது சுகாதாரத் துறையின் ஆய்வகத்தில் 70 மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் முடிவுகள் சில நாட்களில் கிடைக்கும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேநேரம் வழக்கமான கரோனா பரிசோதனைகள் தமிழகம் முழுவதும் அதிகரிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.