இந்திய திரையலகின் நகைச்சுவை நடிகரான போண்டா மணி இன்று ஞாயிற்றுக்கிழமை (24) தனது 60வது வயதில் காலமானார்.
2 சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர், தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகர் போண்டா மணி, 1991ஆம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றமை குறிப்பிடத்தக்கது.