தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல போன் வைத்திருப்பவர் எல்லாம் ஊடகவியலாளர் என்ற நிலையில், புலம்பெயர் தேசத்தில் சில நிகழ்வுகளின்போது, சிலர் அநாகரிகமாக, அசௌகரியமாக நடப்பது வேதனை தருகின்றது.
தேவையற்ற நிலைகளில் தேவையற்ற படங்களை எடுப்பதும், அதனால் அவர்களுக்கு இடையூறுகளையும் மனக் கசப்புக்களையும் ஏற்படுத்தி பெரும் துன்பத்தில் தள்ளி விடுகிறார்கள்.
எல்லோருக்கும் சில தனிப்பட்ட ஆசைகள், நடவடிக்கைகள் என்று உண்டு. அவைகளை எல்லாம் படம் பிடிப்பது ஊடக அறமும் புகைப்பட அறமும் தெரியாதவர்களின் வெளிப்பாடு.
இதனையே தாயகத்தில் மக்கள் செய்தால், காலச்சார சீரழிவு என்று மக்களை நோவது என்பது எவ்வளவு அநீதி? அதனை எப்படி ஏற்றுக்கொள்வது? மிகவும் தவறாக காரியமாகும்.
எனவே, அடுத்தவர்களுக்கு இன்னலும் இடையூறும் விளைவிக்காமல் நடந்துகொள்வோம். பொதுஇடங்களில், பொது நிகழ்வுகளில் அறத்தோடு நடப்போம். குறிப்பாக அறத்துடன் ஊடகத்தை கையாள்வோம்.
கிருபா பிள்ளை