போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டட்டக் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சொந்தமான 67 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி கீதால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளுக்கு அமைய சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் 6 பிரிவினர் மேற்கொண்ட வெவ்வேறு தேடுதல் நடவடிக்கையின் போது போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு சொந்தமான 670 இலட்சம் ரூபா பெறுமதியான 8 வாகனங்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்கள் அனைத்தும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் கீழ் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதனிடையே பாதாளக்குழு மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களின் வீடுகள், ஹோட்டல்கள், விடுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பாதாளக்குழு செயற்பாட்டாளர்கள் தொடர்பில்
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.