பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாடசலை மாணவர்களுக்கான இந்த சலுயைானது அரசாங்க அச்சக திணைக்களத்தினலேயே வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் விபரங்கள்
அத்தோடு, பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் தொடர்பான விபரங்களை வழங்கி புத்தகங்களை விநியோகிப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.