360- டிகிரியில் கனடிய மாவீரர்கள் நினைவு தினம்.
கனடா-வன்கூவரில் இடம்பெற்ற மாவீரர்கள் நினைவு தினத்தன்று மறைந்த போர்வீரர்களிற்கு மரியாதை செலுத்த மக்கள் கூடிய நிகழ்வை குளோபல் செய்தி நிறுவனம் பதிவு செய்துள்ளது.
இந்த வருடம் ஞாபகார்த்த நினைவு தின நிகழ்வுகளை மெய்நிகர் உண்மை காட்சி போன்று சித்தரிக்கும் வகையில் இவர்கள் 360-டிகிரி கமராக்களை பயன்படுத்தியுள்ளனர்.
வன்கூவர் விக்டோரியா சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவுச்சின்ன சுற்றுப்புறத்தின் சகல கோணங்களிலிருந்தும் இந்நிகழ்வுகளை மக்கள் காணக்கூடியதாக இருந்தது. 15-வது பீரங்கி படை வீரர்கள் வெடித்த 21 துப்பாக்கி சூடுகளையும் கவனிக்க கூடியதாக இருந்தது.
Victory சதுக்கத்தில் நடைபெற்ற வீரர்கள் சேவை உறுப்பினர்கள் மற்றும் துருப்புக்களின் அணிவகுப்பு மரியாதை இந்நினைவு தின நிகழ்வுகளை முடிவிற்கு கொண்டு வந்தது.