இப்படியும் நடக்குமா? பார்க்கில் பாலியல் நடவடிக்கைகள். பொதுமக்கள் புகார்.
கனடா-ரொறொன்ரோ. எற்றோபிக்கோ தெற்கு பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்று பாலியல் நடவடிக்கைகளிற்கு பயன்படுத்தப்படுவதாக பொலிசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் செய்ததை தொடர்ந்து இவர்களிற்கு உதவும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை பொலிசார் இது சம்பந்தமாக Project Marie என அழைக்கப்படும் நடவடிக்கையின் பெயரில் 89 குற்றச் சாட்டுக்களை 72பேர்களிற்கு எதிராக சுமத்தியுள்ளனர்.
இச்சம்பவம் ரொறொன்ரோவின் தென்மேற்கு பகுதியில் மிசிசாகாவிற்கு அருகாமையில் எற்றோபிக்கோ கிறிக்-லோங் பிரான்ஞ்சில் அமைந்துள்ள மேரி கர்டிஸ் பார்க்கில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரை தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து சென்ற அதிகாரிகளின் பார்வையில் கடற்கரையில் தனியாக நின்ற நபர் ஒருவர் பட்டுள்ளார்.
இந்நபர் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். அது மட்டுமன்றி அந்நபர் ஒரு பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.
இறுதியாக அன்று பொதுமக்களும் அப்பகுதி சமுகத்தினரும் இத்தகைய சம்பவங்கள் ஏற்று கொள்ள முடியாதவை எங்கள் சுற்று புறத்தில் இத்தகைய நடவடிக்கைகளை நாம் விரும்பவில்லை எனவும் பொலிசாரிடம் தெரிவித்தனர்.