இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பமான பின்னர் தனது குடும்பத்தை சேர்ந்த 120 பேரை இழந்துள்ளதாக காசாவை சேர்ந்த ஹொசாம் வைல் அபு சமல்லா அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நான்கு யுத்தங்களை அவர் சந்தித்துள்ள போதிலும் அவை அனைத்தையும் சேர்த்தாலும் தற்போது இடம்பெறும் விடயங்கள் அவற்றை விட மிகவும் பயங்கரமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
படுகொலைகளின் அளவு இனச்சுத்திகரிப்பு பொதுமக்கள் பல தடவை இடம்பெயர்ந்தது போன்ற புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து பார்த்தால் நாங்கள் நக்பாவின் எண்ணிக்கைகளை எப்போதோ கடந்துவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
1948 இஸ்ரேல் அராபிய யுத்தத்தின் போது இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வே நக்பா என அழைக்கப்படுகின்றது.
எவரையும் இழக்காத எவரையும் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்,அனைவரும் தங்கள்குடும்பத்தவர்கள் நண்பர்கள் உறவினர்கள் பாடசாலை அல்லது அலுலகத்தை சேர்ந்த எவரையாவது இழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.