குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டன் புதிய கடுமையான விசா நடைமுறைகளை அறிவித்துள்ளது.
குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை ஒருபோதும் இல்லாத அளவிற்கு அதிகரித்ததை தொடர்ந்து அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்திருந்த நிலையிலேயே பிரிட்டன் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
மிக அதிகமானதாக காணப்படுகின்ற குடியேற்றவாசிகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்காக உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளெவெர்லி ஐந்து அம்ச திட்டத்தைஅறிவித்துள்ளார்.
கடந்த வருடம் மூன்று இலட்சம் பேர் பிரிட்டனிற்கு வந்தனர் எதிர்காலத்தில் அது சாத்தியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவேண்டும் சுகாதார விசாக்கள் உட்பட பல வகையான விசாக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 இல் இங்கிலாந்திற்கு 745000 குடிபெயர்ந்துள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து இந்த எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என கென்சவேர்ட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரிசி சுனாக்கிற்கு அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.
எதிர்காலத்தில் சுகாதார பராமரிப்பு தொழிலாளர்கள் பிரிட்டனிற்கு தங்களை நம்பியுள்ளவர்களை அழைக்கமுடியாது என பிரிட்டனின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.