காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சிஎன்என்னின் காசா செய்தியாளரின் உறவினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவரின் பூர்வீக வீடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் மேற்கொண்ட ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதல்கள் முற்றுகையிடப்பட்டுள்ள காசாவிற்கு பேரழிவை கொண்டுவந்த நிலையில் சிஎன்என்னின் காசா செய்தியாளர் இப்ராஹிம் டகமான் அங்கிருந்து செய்திகளை வெளியிட்டு வந்தார்.
எனினும் அவர் பின்னர் தனது குடும்பத்தினருடன் எகிப்திற்கு தப்பிச்சென்றார் எனினும் ஞாயிற்றுக்கிழமை காசாவில் சிக்குண்டிருந்த தனது உறவினர்கள் தனது உறவினரின் வீட்டை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளதை அறிந்துள்ளார்.
சிஎன்என் செய்தியாளரின் 9 உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அவருடைய பூர்வீகவீடும் அந்த வீட்டிற்கு அருகில் உள்ள வீடு இலக்குவைக்கப்பட்டதால் தரைமட்டமாகியுள்ளது.
நான் வளர்ந்த எனது பிள்ளைகளை வளர்த்த அந்த வீட்டின் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு மூலையையும் என்னால் மறக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
டஹ்மானின் குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை கரும்நாளாக காணப்படுகின்றது.
பெய்ட் லகியாவில் அவரது உறவினர்கள் வாழ்ந்த வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதில் பல உறவினர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி அன்றே அவருக்கு கிடைத்துள்ளது.
இரண்டு உறவினர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளனர்.
அவர்கள் மிகவும் அமைதியானவர்கள் என தெரிவித்துள்ள டஹ்மன் அவர்கள் தங்கள் குடும்பங்களை பிள்ளைகளை வளர்ப்பதிலேயே காலத்தை செலவிட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு எந்த அமைப்புடனும் தொடர்பிருக்கவில்லை அவர்கள் மீது இரக்கம் காட்டுமாறு ஆண்டவனை பிரார்த்தியுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளரின் உறவினர்கள் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
முற்றாக சிதைவடைந்துள்ள கட்டிடத்திலிருந்து புகைமண்டலம் வெளிவருவதை காணமுடிகின்றது.
வீதியில் சிதைவுகளை காணமுடிகின்றது.