16 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு தண்டனை
இராணுவப் புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த 16 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டளை அதிகாரிகள், லெப்டினன் கேணல்கள் உள்ளிட்ட 16 அதிகாரிகள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
கரந்தெனியவில் அமைந்துள்ள இராணுவப் புலனாய்வு பிரிவு படையணியில் வைத்து இராணுவ சட்டங்களுக்கு அமைய அண்மையில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியாளர் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின், இராணுவப் புலனாய்வுப் பிரிவு இரகசியங்கள் மற்றும் ஆவணங்களை உரிய முறையில் பேணப்படாமை குறித்து குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆவணங்களை சரியான வகையில் பேணிப் பாதுகாக்கத் தவறியமை தொடர்பில் குற்றம் சுமத்தி இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 16 அதிகாரிகளும் ஒரு ஆண்டு காலத்திற்கு கண்காணிக்கப்படவுள்ளனர்.