19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் கொழும்பு -13, கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் சாருஜன் சண்முகநாதன் இடம்பிடித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரிலும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணிக்காக சாருஜன் சண்முகநாதன் விளையாடியிருந்தார்.
விக்கெட்காப்பாளரான இவர் , இடதுகை துடுப்பாட்ட வீரரரும் ஆவார்.
ஆசிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் இம்மாதம் 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இதன் குழு ஏயில் இலங்கை, பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய அணிகளும், குழு பீயில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன.
இலங்கை அணி இம்மாதம் 9 ஆம் திகதியன்று ஜப்பான் அணியையும், 11 ஆம் திகதியன்று ஐக்கிய அரபு இராச்சிய அணியையும், 13 ஆம் திகதியன்று பங்களாேதேஷ் அணியையும் எதிரத்து விளையாடவுள்ளது.
இலங்கை குழாம் விபரம்
சினெத் ஜயவர்தன( அணித்தலைவர்) மல்ஷ தருபதி (உப அணித்தலைவர்) , புலிந்து பெரேரா, ருசந்த கமகே, ரவிஷான் நெத்சர, சாருஜன் சண்முகநாதன், தினுர கலுபஹன, விஷ்வ லஹிரு, கருக சங்கேத்த, விஷேன் எலம்பகே, ருவிஷான் பெரேரா, விஹாஸ் தெவ்மிக, துவிந்து ரணதுங்க, ஹிருன் கப்புருபண்டார, தினுக்க தென்னகோன்.
மேலதிக வீரர்கள் – ஜனித் பெர்னாடோ, சுப்புன் வடுகே.