உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பான இலஙகையின் உடன்படிக்கை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
கடன் மறுசீரமைப்பு மற்றும் உறுதியான பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான உடன்படிக்கையானது சர்வதேச நாணயநிதியத்தின் அடுத்த தவணையை சரியான நேரத்தில் வெளியிடுவதற்கு முக்கியமானது இது இலங்கை மக்களுக்கு நன்மையளிக்கும் தொடர்ச்சியான பொருளாதார ஸ்திரப்படுத்தல் மீட்சி மற்றும் பொது சேவைகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதி உதவியை வழங்கும்.
இது இலங்கையின் பொருளாதார ஸ்திரதன்மைக்கான சாத்தியமான பாதையை உருவாக்குகின்றது.
இலங்கையின் பேண்தகுமீட்பிற்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.