இயலாதவர்களின் காழ்ப்புணர்ச்சியால் எமது வெற்றிகளை ஒருபோதும் தடுக்க முடியாது. இன்றைய ஊடக உலகில் வெளிப்படையாகவும் வெள்ளந்தியாகவும் செயற்படும் தன்மைகளுக்கு எவரும் கெட்ட சாயங்கள் எதனையும் பூச முடியாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
தேசிய ஊடகங்களில் ஊதியத்திற்கு வேலை செய்தவர்கள் தாம் ஊதியத்திற்கே அங்கு வேலை செய்தவர்கள் என்பதை நாம் அறிவோம். அதனைத் தாண்டி அவர்கள் இனத்திற்கும் சமூகத்திற்கும் அர்த்தமுள்ள வகையில் தொண்டாற்றினார்களா? ஊடகப் பணியையேனும் தொண்டாக செய்தார்களா?
இன்று கையறு நிலையில் எதனையும் செய்ய முடியாது, வளர்ச்சி அடைபவர்களை பார்த்து காழ்ப்புணர்வுகளை கொட்டித் தீர்க்கின்றனர். அவதூறுகளை அள்ளி வீச முயல்கின்றனர். அது அவர்களையே மீள வந்து சேரும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளத் தவறுவதுதான் வேடிக்கையானது.
கனடாவில் ஊடகங்கள் வாயிலாக, குறிப்பாக சமூக ஊடகங்களின் துணையுடன் விடுதலைக்கும் சமூகத்திற்கும் நம்பிக்கை ஊட்டும் நிகழ்வுகளை சளைக்காமல் செய்து வருகிறோம். இன்னமும் செய்வோம். உங்கள் காழ்ப்புணர்வுகளும் பொறாமைகளும் எமை ஒன்றும் செய்யாது. மாறாக எமக்கான படிக்கற்களாகவே மாறும்.
சொல்லுக்கு முன் செயல் என்ற தலைவர் சிந்தனையில் எமது பயணம் தொடரும்…
கிருபா பிள்ளை