கசினோ ராமாவில் சைபர் தாக்குதல். வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டன.
கனடா-ஒன்ராறியோ கசினோ ராமா சைபர் தாக்குதலிற்கு ஆளானதால் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஒன்ராறியோ கசினோ ராமா ரிசார்ட் அதனது வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தற்போதைய முன்னைய பணியாளர்கள் அனைவரையும் அவர்களது வங்கி கணக்குகள் கடன் அட்டைகள் மற்றும் ஏனைய நிதி தகவல்கள் குறித்து விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கின்றது.
நவம்பர் 4-ந்திகதி ரிசார்ட் இந்நிலைமையை தெரிந்து கொண்டது.
வாடிக்கையாளர்களின் கடன் விசாரனைகள், கடன் மற்றும் சேகரிப்பு தகவல்கள், பணியாளர்களின் விபரங்கள்- ஊதிய பட்டியல் தரவு உட்பட சமூக காப்புறுதி இலக்கம் மற்றும் பிறந்த நாள் தகவல்கள் போன்றனவும் திருடப்பட்டு விட்டன.
இத்தாக்குதல் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இடம் பெற்றிருப்பதால் மற்றய கசினோ வாடிக்கையாளர்கள் அச்சமடைய தேவையில்லை என ஒன்ராறியோ லாட்டரி மற்றும் கேமிங் ஆணையம் தெரிவிக்கின்றது.
பொலிசார் புலன் விசாரனை செய்கின்றனர்.