ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவரின் வீட்டை இலக்கு வைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
கட்டாரில் தற்போது வசித்துவரும் ஹமாசின் அரசியல் பிரிவின் தலைவர்களி;ல் ஒருவரான இஸ்மாயில் ஹனியேயின் வீட்டையே இஸ்ரேல் இலக்குவைத்துள்ளது.
குறிப்பிட்ட வீடு பயங்கரவாத உட்கட்டமைப்பாகவும் சிரேஸ்ட தலைவர்கள் சந்திப்பதற்கான இடமாகவும் பயன்படுத்தப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
விமானதாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹனியே ஹமரிசின் ஒட்டுமொத்த தலைவராக கருதப்படுகின்றார்.
2017 இல் ஹமாசின் அரசியல்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட அவர் தற்போது கட்டாரில் வசிக்கின்றார்.
1980களில் ஹமாசின் முக்கிய உறுப்பினராக விளங்கிய இவர் பல வருடங்கள் இஸ்ரேலின் சிறையிலிருந்தார்.