நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்களை சட்டத்துக்கு முன்னால் கொண்டுசெல்ல வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம்.
என்றாலும் தற்போது உயர் நீதிமன்றம் இது தொடர்பாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கி இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (15) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடி மூலம் மக்களின் அடிப்படை உரிமை, மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் போராட்டத்தின்போது தெரிவித்திருந்தன.
அதேபோன்று இந்த பொருளாதார நெருக்கடி மனிதர்களால் உருவாக்கப்பட்டது என இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவித்திக்கான ஆய்வு மையத்தைச் சேர்ந்த மிக் மூர் தெரிவித்திருந்தார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது வியோன் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போது இது நிர்மாணிக்கப்பட்ட பேரழிவு என தெரிவித்திருந்தார்.
ஆனால் அவர் ஜனாதிபதியான பின்னர் இந்த பேரழிவை ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்களைக்கொண்டு தெரிவுக்குழு ஒன்றை அமைத்தார். அதனால் நாங்கள் அந்த தெரிவுக்குழுவில் இருந்து நீங்கிக்கொண்டாேம்.
அத்துடன் பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்றவகையில் நாங்கள் இந்த நாட்டின் பொருளாதார பெரழிவுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவந்தோம்.
அதற்காக எங்களுக்கு முன்னாள் சிறந்த 3புத்திஜீவிகள், திறமையான சட்டத்தரணிகளும் இருந்தனர். நாட்டை வங்குராேத்து நிலைக்கு கொண்டுசென்றவர்களை சட்டத்துக்கு முன்னால் கொண்டுசெல்ல வேண்டும் என நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தோம். என்றாலும் தற்போது உயர் நீதிமன்றம் இது தொடர்பாக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கி இருக்கிறது.
அதாவது இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியமைக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் பெயர் குறிப்பிட்டு தீர்ப்பளித்திருக்கிறது.
மக்களின் நம்பகத்தன்மை என்ற காெள்கைகளை கோத்தாபய ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ், பசில் ராஜபக்ஷ், நிவாட் கப்ரால், டபிள்யூ.டீ. லக்ஷ்மன், பீ.பீ. ஜயசுந்தர, ஆட்டிகல மற்றும் நாணயச்சபை மீறியுள்ளதாக 4 நீதிபதிகளில் 3 பேர் தெளிவாக தீர்ப்பளித்துள்ளனர். நாட்டை வங்குராேத்து அடையச்செய்தது யார் என்பது தொடர்பாக கருத்தாடல்கள் இடம்பெற்று வந்திருந்தன. என்றாலும் இந்த பொருளாதார வங்குராேத்து நிலைக்கு யார் காரணம் என்பதை உயர் நீதிமன்றம் தெளிவாக பெயர் குறிப்பிட்டு தெரிவித்திருக்கிறது.
எனவே நாட்டின் பொருளாதாராத்தை சீரழித்து பொருளாதார கொலைகாரர்களாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தருப்பவர்களே இந்த நிலைக்கு காரணமாகும்.
ஒட்டுமொத்த சமூகமும், ஒவ்வொருவரும், வங்குரோத்து தன்மையால் வாழ்வாதாரம் அழிந்த தரப்பினர் போன்றவர்கள், பொருளாதார அழிவின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட பராபட்சத்திற்கு இந்த நபர்களிடம் இழப்பீடு கோரலாம்.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நீதிமன்றத்தைப் பயன்படுத்தி,நாட்டின் பொருளாதாரக் கொலைகாரர்கள் யார் என்பதை நிரூபிக்க முடிந்துள்ளது. இதனை வெளிப்படுத்த காரணமான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் பேரவை மற்றும் சட்டத்தரணிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.