மெல்பேர்னில் இன்று உணவுவிடுதியில்ஏற்பட்ட தீ விபத்திற்கு காசா மோதல் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
உணவுவிடுதியின் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர் என்பதால் அவரதுஉணவுவிடுதி இலக்குவைக்கப்பட்டதாக சந்தேகங்கள் வெளியாகின்றன.
கால்ஃபீல்டில் உள்ள வர்த்தகநிலையமொன்றில் தீப்பிடித்துள்ளதாக அவசரசேவை பிரிவினருக்கு தகவல் வந்ததாகவும் எனினும் அந்த வர்த்தக நிலையத்திற்குள் எவரும் இருக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைகள் இடம்பெறுகின்றன சந்தேகம் உள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹாஸ் டேயே என்பவரே இந்த விடுதியை ஆரம்பித்துள்ளார் – இவர் கடந்த வாரம் பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டமைக்காக விமர்சனங்களை எதிர்கொண்டவேளை தனது நடவடிக்கையை நியாயப்படுத்தியிருந்தார்.