இலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மிக முக்கியமான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பெங்களூர் எம். சின்னஸ்சுவாமி விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதியைப் பெறுவதற்கு இலங்கை முயற்சி செய்யும் அதேவேளை, உலகக் கிண்ண அரை இறுதி வாய்ப்பை பெறுவதைக் குறிவைத்து நியூஸிலாந்து விளையாடவுள்ளது.
இப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன், களத்தடுப்பை தெரிவுசெய்தார்.
இதற்கு அமைய இலங்கை அணி துடுப்பெடுத்தாடுகிறது.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேகபந்துவீச்சாளர் கசுன் ராஜித்தவுக்குப் பதிலாக சாமிக்க கருணாரட்ன விளையாடுகிறார்.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, துஷமன்த சமீர, டில்ஷான் மதுஷன்க.
நியூஸிலாந்து: டெவன் கொன்வே, ரச்சின் ரவிந்த்ரா, கேன் வில்லியம்சன் (தலைவர்), டெரில் மிச்செல், டொம் லெதம், மார்க் செப்மன், க்ளென் பிலிப்ஸ், மிச்செல் சென்ட்னர், டொம் லெதம், டிம் சௌதீ, லொக்கி பெர்கசன், ட்ரென்ட் போல்ட்.