சமூக ஊடகங்கள் தான் இன்றைய ஆயுதமாக செயற்படுகின்றன. எந்த ஊடக பலமும் இல்லாதவர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக நல்ல கருத்துக்களை வெளியிடுவதனால் அவர்களுக்கு மக்களின் ஆதரவு பெருகின்றது.
குடிமக்கள் ஊடகம் எனப்படும் சமூக ஊடகம் புதிய ஊடகத்தால் உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம். அச் சமூக ஊடகங்களை கொண்டு உலகில் பலரும் தமது ஆளுமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் புலம்பெயர் தேசங்களிலும் சமூக ஊடகங்கள் வாயிலாக நாம் பல சாதனைகளை சாதித்து மாற்றங்களை நிகழ்த்தி வருவதுடன் மக்கள் செல்வாக்கையும் பெறுகின்றோம்.
இதேவேளை வர்த்த நோக்கில் செயற்படும் பழைய ஊடகங்கள் இன்று மக்கள் செல்வாக்கை இழந்து நிற்கின்றன. அவர்களால் எந்தவொரு நிகழ்வையும் நடாத்த முடியாத நிலை காணப்படுகிறது.
அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை. இந்த நிலையில் அவர்கள் எம்மைப் போன்ற ஊடக செயற்பாட்டாளர்கள்மீது தமது வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் கொட்டி வருகின்றனர்.
அதனால் எதனையும் சாதிக்க முடியாது. காலத்திற்கு ஏற்ப நம்மை புதுப்பித்து, நமது மனங்களை அதற்கு ஏற்ப வளர்த்தெடுத்து மாற்றங்களை உள்வாங்கி செயற்பாட்டால் எல்லோருக்கும் ஊடகம் ஆயுதமாகும்.
‘ஊடகப் போராளி’ கிருபா பிள்ளை