மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் என்ற அமைப்பு பேர்ள் எனவும் தெரிவித்துள்ளது
பேர்ள் அமைப்பு இது குறித்து தெரிவித்துள்ளதாவது
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனையில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களுடன் இணைந்து கொண்ட மாணவர்கள் கைதுசெய்யப்பட்டதை- நடத்தப்பட்டi பேர்ள் அமைப்பு கண்டிக்கின்றது.
மயிலத்தமடு விவகாரத்தில் பௌத்த மதகுருமார் வன்முறை மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்போது நடவடிக்கை எடுக்காத பொலிஸார் அதேவிவகாரத்தில் தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக துன்புறுத்தல்கள் அச்சுறுத்தல் வன்முறைகள் போன்றவற்றில் ஈடுபடுவது அவர்களின் இரட்டை அணுகுமுறையை காண்பிக்கின்றது என தமிழ்அரசியல்வாதிகளும் சிவில் சமூகத்தினரும் சுட்டிக்காட்டிவருகின்றனர்.
சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைகளிற்கு எதிராக பல மாதங்களாக தமிழ் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் கால்நடைகளை தொடர்ந்தும் ஈவிரக்கமற்ற விதத்தில் கொலைசெய்வதுடன் வெடிபொருட்களை பயன்படுத்தி கொலை செய்கின்றனர்.
ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுமாறு ரணில்விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ள போதிலும் பொலிஸார் அவர்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதற்கு அனுமதித்துள்ளனர்.
மயிலத்தமடு விவகாரம் வடக்கு கிழக்கில் சிங்களமயமாக்கலை முன்னெடுத்துச் செல்வதிலும் தண்டனையின்மை கலாச்சாரத்தை வலுப்படுத்துவதிலும் அரச படைகள் பலப்படுத்தப்படுவதைக் காட்டுகிறது.
இலங்கை தற்போது நிலவும் நெருக்கடியிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயற்சிக்கும் வேளையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் இலங்கையின் அரசியல் விருப்பமின்மையை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.