காசாவின் வடபகுதி மருத்துவமனைகளில் நூற்றிற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிக்குண்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.
வடகாசாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து நோயாளர்களை வெளியேற்றுமாறு இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது எனினும் இது சாத்தியமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
அருகில் தாக்குதல் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளையே நோயாளிகளை வெளியேற்றுமாறு இஸ்ரேல் தங்களை கேட்டுக்கொண்டது என செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
பலர் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா அமைப்பின் பாடசாலைகளிலும் மருத்துவமனைகளிலும் மருத்துவமனைகளிலும் அவர்கள் தஞ்சமடைகின்றனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் டொம்வைட் தெரிவித்துள்ளார்.
நான் சமீபத்தில் மருத்துவமனையொன்றிற்கு சென்றேன் அங்கிருந்து வேறு இடங்களிற்கு மாற்ற முடியாத நூற்றுக்கணக்கான நோயாளிகள் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
வடபகுதியிலிருந்து வெளியேற்ற முடியாதவர்கள் நோயாளிகள் மாத்திரமில்லை மக்களும் போக்குவரத்து வசதி இல்லாததால் நகரமுடியாத நிலையில் உள்ளனர் அவர்கள் கடும் பசி அச்சம் தண்ணீர் தாகம் போன்றவற்றின் பிடியில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் ஒரு சிலதுண்டு பாணை உண்டு வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.