31 ஆண்டுகால சாதனையை முறியடித்த இலங்கை வீரர்
இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ்வின் சாதனையை முறியடித்துள்ளார்.
இலங்கை அணி அண்மையில் ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வென்று ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது.
இதில் இலங்கை அணியின் தலைவர் என்ற விதத்திலும் சுழற்பந்து வீச்சாளர் என்ற விதத்திலும் ரஹ்கன ஹேரத் இலங்கை அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிகளில் 8 விக்கெட் வீழ்த்திய ரங்கன ஹேரத், இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில் தேவ்வின் சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 1985 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைவராக இருந்த கபில் தேவ் அடிலெய்டில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியின் போது 8 விக்கெட்டுகள் வீழ்த்தி 106 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். இதுவே ஒரு அணியின் தலைவர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் தலைவரான ஹேரத் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி 63 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.
இதன் மூலம் இந்திய அணியின் தலைவர் கபில்தேவ்வின் 31 ஆண்டுகால சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.