சீன முன்னாள் பிரதமர் லீ கெகியாங்-க்கு நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 68 வயதாகும்.
தற்போது, அவரது மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பொருளாதார வல்லுனரான இவர் சீனாவின் முன்னேற்றத்திற்கு அரும்பாடு பட்டவராவார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அவர், கட்சியில் செல்வாக்கு நிறைந்தவராக பார்க்கப்பட்டார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மீண்டும் பதவியேற்ற பின்னர் அவரை ஓரங்கட்ட துவங்கினார். இதனால் பிரதமர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று ஷங்காய் நகரில் வசித்து வந்தார்.