தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் வாகனம் ஒன்று வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி இடம்பெற்ற விபத்தில் தம்பதியினர் காயமடைந்துள்ளதாக குருதுகஹ ஹடேகம அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் ஐஸ்கிரீம் வாகனம் வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு வேலியில் மோதியுள்ளதோடு வாகனத்தின் சாரதி இடது பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் வாகனத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு வாகனம் கவிழ்ந்துள்ளது.
ஐஸ்கிரீம் விற்பனை வாகனமானது கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் ஐஸ்கிரீம் விற்பனை செய்துவிட்டு கடவத்தையில் இருந்து அம்பலாந்தோட்டை நோக்கி பயணித்த போது லொறின் ஓட்டுனர் உறங்கியமையினால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த தம்பதியினர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தம்பதியின் இரண்டரை வயது குழந்தை எவ்வித காயமும் இன்றி தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.