ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காஸா பிராந்தியத்துக்குள் இஸ்ரேலியப் படையினர் தரைவழியாக நுழைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
காஸாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தரைவழி முற்றுகைகளை இஸ்ரேலியப் பiயினர் நடத்தியதாகவும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காஸா எல்லை வேலியின் மேற்குப் பகுதிக்குள் இஸ்ரேலியப் படையினர் சென்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸிடமிருந்து அப்பகுதியை சுத்தப்படுத்துவதற்காகவும் ஆயுதங்களைத் தேடியும், பணயக்கைதிகளை கண்டுபிடிப்பதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியப் படையினர் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் இஸ்ரேலியப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரி
இதேவேளை காஸா எல்லைக்குள் இஸ்ரேலியப் படையினருடன் தாம் போராடியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கான் யூனிஸ் நகருக்கு கிழக்குப் பகுதியில் இம்மோதல் நடந்ததாக ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படையினரின் இரு புல்டோஸர்கள், தாங்கி ஆகியனவற்றை தாம் அழித்ததாகவும், இஸ்ரேலியப் படையினர் வாகனங்களைக் கைவிட்டு வேலிக்கு கிழக்கே தப்பிச் சென்றனர் எனவும் ஹமாஸின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஞாயிறு இரவு காஸாவுக்குள் மேலும் முற்றுகைகைள இஸ்ரேலியப் படையினர் நடத்தினர் இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டேனியல் ஹகாரி நேற்று தெரிவித்தார்.
222 பணயக் கைதிகள்
பணயக்கைதிகளை மீட்கும் நடவடிக்கைகளுக்காக இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அதேவேளை, இஸ்ரேலிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு, காஸாவில் பணயக்கைதிகளாக 222 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
24 மணித்தியாலங்களில் 320 தாக்குதல்கள்
காஸா பிராந்தியத்தில் 24 மணித்தியாலங்களில் 300 இற்கும் அதிகமான தாக்குதல்களை தான் நடத்தியதாக இஸ்ரேல் நேற்று (23) தெரிவிததுள்ளது.
24 மணித்தியாலங்களில் 320 இற்கும் அதிகமான இராணுவ நிலைகளை இலக்கு வைத்து தான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நேற்று தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தினரின் சுரங்கப்பாதைகள், ஹமாஸின் செயற்பாட்டு கட்டளை மத்திய நிலையங்கள் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் இயக்கத்தின் கண்காணிப்பு நிலையங்களும் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
மேற்குக் கரையில் 800 பேர் கைது
பலஸ்தீனத்தின் மேற்குக் கரை பிராந்தியத்தில் தேடப்பட்ட 800 பலஸ்தீனியர்களை கடந்த 7 ஆம் திகதியிலருந்து தான் கைது செய்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இவர்களில் 500 இற்கும் அதிகமானோர் ஹமாஸ் இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என இஸ்ரேல் கூறுகிறது.
நேற்றுமுன்தினம் மாத்திரம் மேற்குக்கரையில் 37 ஹமாஸ் அங்கத்தவர்கள் கைது செய்யப்பட்டனர் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேற்குக்கரையின் ரமல்லா நகருக்கு அருகிலுள்ள ஜலாஸோன் அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படையினர் நேற்றுமுன்தினம் நடத்திய முற்றுகைகளில் இரு பலஸ்தீனர்கள் உயிரழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர் என பலஸ்தீன சுகாதார அமைசசு தெரிவித்துள்ளது.
நிவாரணங்களுடன் 34 லொறிகள்
கடந்த 7 ஆம் திகதியின் பின்னர் கடந்த சனிக்கிழமை முதல் தடவையாக காஸாவுக்குள் நிவாரணப் பொருட்களை ஏற்றிய லொறிகள் எகிப்திலிருந்து காஸாவுக்குள் பிரவேசித்தன.
கடந்த சனி, ஞாயிறு தினங்களில் 34 லொறிகள் காஸாவுக்குள் சென்றுள்ளதாக எகிப்திய செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், காஸாவிலுள்ள சுமார் 24 இலட்சம் மக்களுக்காக தினமும் 100 லொறி நிவாரணப் பொருட்கள் தேவைப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.