இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்களுக்கு 30,000 அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்களின் நலனுக்காக ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால் பயன்படுத்துவதற்கு குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடமிருந்து 20,000 அமெரிக்க டொலர்களும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடமிருந்து 10,000 அமெரிக்க டொலர்களுமாக மொத்தம் 30,000 அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக இரண்டு இலங்கையர்கள் காணமல்போயுள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார்.
யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் பட்டியலை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் சுமார் 8,000 இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 90 சதவீதம் பேர் முதியோர் இல்லங்களில் பராமரிப்பாளர்களாக உள்ளனர். காசா மற்றும் லெபனான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதற்றம் நிலவினாலும், நாட்டின் பிற பகுதிகளில் இயல்பு நிலை நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.