கொழும்பில் அண்மையில் நடைபெற்ற 54ஆவது Saints Quadrangular விளையாட்டுப் போட்டியில் ஓல்ட் அன்டோனியன்ஸ் விளையாட்டுக் கழகம் ஒட்டுமொத்த சம்பியனாகி ரஞ்சித் சமரசேகர ஞாபகார்த்த கிண்ணத்தை முதல் தடவையாக சுவீகரித்தது.
கண்டி புனித அந்தோனியார் கல்லூரி, கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி, மருதானை புனித சூசையப்பர் கல்லூரி, பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்களுக்கு இடையில் Saints Quadrangular விளையாட்டுப் போட்டி வருடாந்தம் நடத்தப்பட்டு வருகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டன. இதற்கு அமைய ஓல்ட் அன்டோனியன்ஸ் விளையாட்டுக் கழகம் 40 வயதுக்குட்பட்ட பிரதான பிரிவு கிரிக்கெட் போட்டியில் இணை சம்பியனானது.
40 வயதுக்கு மேற்பட்ட கிரிக்கெட் போட்டி, அணிக்கு எழுவர் றக்பி போட்டி ஆகியவற்றில் ஓல்ட் அன்டோனியன்ஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
இதற்கு அமைய ஓட்டு மொத்த சம்பியனுக்கான ரஞ்சித் சமரசேகர ஞாபகார்த்த கிண்ணத்தை ஓல்ட் அன்டோனியன்ஸ் விளையாட்டுக் கழகம் சுவீகரித்தது.
ஒட்டு மொத்த சம்பியன் கிண்ணத்தை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் புபுது ராஜபக்ஷவிடமிருந்து ஓல்ட் அன்டோனியன்ஸ் விளையாட்டுக் கழக கொழும்பு கிளைத் தலைவர் ரொஹான் விஜேசிங்க வும் உறுப்பினர்களும் பெற்றுக்கொண்டனர்.
இந்த வருட Saints Quadrangular விளையாட்டுப் போட்டியை ஓல்ட் பெனடிக்டைன்ஸ் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.