இஸ்ரேலில் தற்போது நிலவும் மோதல் காரணமாக இலங்கையர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE)அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, +94716640560 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற தொலைபேசி இலக்கத்துடன் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் சுமார் 8,000 இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதுடன், அதில் 90 வீதமானோர் தாதியர் சேவையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்டு இலங்கையர்களின் நிலைமை குறித்து தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கேட்டறிந்துள்ளார்.
இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளார்.