மத்திய அரசு முதன் முதலாக பாலின-நடுநிலை பயண ஆவண சலுகை வழங்குகின்றது.
கனடா-மத்திய அரசாங்கம்எ“other” னப்படும் ஒரு பாலின பகுதியை கனடாவிற்குள் நுழையும் பயணிகளிடமிருந்து ஏற்றுக்கொள்கின்றது.
இணையத்தள மின்னணு பயண அங்கீகாரத்திற்கு (eTA), விசா-விலக்கு பெற்ற வெளிநாட்டு பிரசைகளிற்கு புதிய நுழைவு தேவையாக “other” எனப்படும் ஒரு பாலின தெரிவு சேர்க்கப்படுகின்றது.
இந்த பாலின அந்தஸ்து பயணிகளின் கடவு சீட்டில் காணப்படுவதுடன் ஒத்து போக வேண்டும்.
தாங்கள் ஆணா அல்லது பெண்ணா என தங்களை அடையாளம் காணமுடியாத சில வெளிநாட்டு பயணிகளால் எதிர்கொள்ளப்பட்ட பிரச்சனைகளிற்கு தீர்வு காண இந்த புதிய முறை வழிவகுக்கும் என நம்பபடுகின்றது.
நடுநிலை-பாலின தெரிவை அடையாள அட்டைகளில் கொண்டுவர ஒட்டாவா பரிசீலித்து வருவதாக கடந்த கோடை காலத்தில் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ CP24 விற்கு தெரிவித்தார். 2017-ல் பாலின-நடுநிலை சாரதிகள் அனுமதி பத்திரம் மற்றும் சுகாதார அட்டைகளில் அறிமுகப்படுத்தப்படும் என ஒன்ராறியோ அறிவித்த பின்னர் பிரதமர் இச்செய்தியை தெரிவித்தார்.
விசா-விலக்கு நாடுகளில் இருந்து கனடாவிற்கு அல்லது கனடா ஊடாக பயணிக்கும் வெளிநாட்டவர்களிற்கு eTA அவசியம். யு.எஸ்.பிரசைகள் மற்றும் செல்லு படியான கனடிய விசா வைத்திருப்பவர்கள் விதிவிலக்கானவர்கள்.
ஆன்லைனில் eTA ஒன்றிற்கு விண்ணப்பிக்க செலவு 7டொலர்கள். கடல் அல்லது தரை மார்க்கமாக கனடா வருபவர்களிற்கு eTA தேவையில்லை.