கடற்கரை கரப்பந்தாட்ட அணியில் இடம்பெற்ற கே. லசினியா, எஸ். சிறிசாந்தினி, எம். தனுஷிகா, ஜெ. திலக்சனா.
கே. லசினியா, பயிற்றுவிப்பாளரும் வேவல்ஹின்ன தமிழ் வித்தியால அதிபருமான என். சுந்தரராஜ்
வீராங்கனைகளுடன் ஹாலிஎல பிரதேச செயலகத்தின் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி என். சிவக்குமார்
(பசறை நிருபர்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நடத்தப்பட்டுவரும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் ஓர் அங்கமான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் ஹாலி எல பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த விரியும் சிறகுகள் கழகம் வெண்கலப் பதக்கததை வென்று அசத்தியது.
பதுளை மாவட்ட இளைஞர் மன்றம் சார்பாக கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் விரியும் சிறகுகள் விளையாட்டுக் கழகம் பங்குபற்றியிருந்தது.
குருநாகல் மாவட்ட இளைஞர் மன்ற அணியுடன் மோதி 3 – 2 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற விரியும் சிறகுகள் அணி 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்துகொண்டது.
தேசிய இளைஞசர் சேவைகள் மன்ற விளையாட்டு விழாவின் 34 வருட வரலாற்றில் பதுளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியொன்று மூன்றாம் இடத்தைப் இதுவே முதல் தடவையாகும்.
வெண்கலப் பதக்கம் வென்ற விரியும் சிறகுகள் அணியில் ஜெயராமன் திலக்சனா, கனகநாதன் லசினியா, செல்வன் சிறிசாந்தினி ஆகியோர் இடம்பெற்றனர்.
அவர்களில் திலக்சனா தேசிய கரப்பந்தாட்ட அணியில் இடம்பெற்றதுடன் கடற்படை கரப்பந்தாட்ட அணிக்காக விளையாடிவருகிறார். லசினியா விமானப்படை கரப்பந்தாட்ட அணிக்காக விளையாடிவருகிறார்.
விரியும் சிறகுகள் அணிக்கு வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலய அதிபர் என். சுந்தரராஜ் பயிற்சி அளிக்கிறார்.