பொருளாதார ஸ்திரதன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்ட போதிலும் இலங்கையின் பொருளாதார மீட்சி இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கையின் பொருளாதாரத்தை நிலையான மீட்சி மற்றும் நீடித்த வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதற்கு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் வேகத்தை தொடர்ந்து பேணுவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பாரிய சவால்களிற்கு மத்தியில் இலங்கை மக்கள் பாரிய மீள்எழுச்சிதன்மையை வெளிப்படுத்தியுள்ளனர் இலங்கை மிகவும் கடினமான ஆனால் அவசியமான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில்குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பித்துள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமடைவதற்கான தற்காலிகமான அறிகுறிகளை வெளிப்படுத்துவதால் இந்த முயற்சிகள் பலனளிக்கின்றன ,செப்டம்பர் 2022 இல் 73 வீதமாக காணப்பட்ட பணவீக்கம் இந்த வருடம் செப்டம்பரில் இரண்டு வீதமாக காணப்பட்டது இந்த வருடம் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை சர்வதேச கையிருப்புகள் 1.5 பில்லியனாக அதிகரித்தன – அத்தியாவசிய பொருட்களிற்கான தட்டுப்பாடு குறைவடைந்துள்ளது எனவும் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார ஸ்திரதன்மைக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் காணப்படுகின்ற போதிலும் முழுமையான பொருளாதார மீட்சி இன்னமும் உறுதியாகவில்லை, வளர்ச்சியை வேகம் குறைவாகவே உள்ளது சமீபகாலங்களில்கையிருப்பு குறைவாகவே உள்ளது எனவும் சர்வதேச நாணயநிதிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.