இந்தியாவுக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடப் போகும் அணியைத் தீர்மானிக்கும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சுப்பர் 4 கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (14) சற்று முன்னர் ஆரம்பமானது
சீரற்ற காலநிலை காரணமாக இரண்டரை மணித்தியால தாமதத்தின் பின்னர் ஆரம்பமான இப்போட்டி அணிக்கு 45 ஓவர்களைக் கொண்டதாக நடைபெறுகிறது.
இப் போட்டியை முன்னிட்டு இலங்கை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
திமுத் கருணாரட்னவுக்கு பதிலாக குசல் ஜனித் பெரேராவும் கசுன் ராஜித்தவுக்கு பதிலாக ப்ரமோத் மதுஷானும் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்றைய போட்டி ஒருவேளை மழையினால் கைவிடப்பட்டால் நிகர ஓட்ட வேக அடிப்படையில் இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதிபெறும்.
அணிகள்
இலங்கை: குசல் ஜனித் பெரேரா, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, ப்ரமோத் மதுஷான், மதீஷ பத்தரண.
பாகிஸ்தான்: பக்கார் ஸமான், அப்துல்லா ஷபிக், பாபர் அஸாம் (தலைவர்), மொஹமத் ரிஸ்வான், மொஹமத் ஹரிஸ், இப்திகார் அஹ்மத், ஷதாப் கான், மொஹமத் நவாஸ், ஷஹீன் ஷா அப்றிடி, மொஹமத் வசிம, ஸமான் கான்.