சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் அந்நாட்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம் நாட்டின் சம்பிரதாயமான ஜனாதிபதி பதவிக்கு போட்டியின் மூலம் தெரிவாகியுள்ளார்.
எதிர்த்து போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களை விட 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று 66 வயதான பொருளாதார நிபுணர் தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றதாக சிங்கப்பூர் தேர்தல்கள் திணைக்களம் வெள்ளிக்கிழமை (1) அறிவித்தது.
சிங்கப்பூரை பொறுத்தமட்டில் ஜனாதிபதி பதவி என்பது பெரும்பாலும் ஒரு சம்பிரதாயம், அரசியலமைப்பின் கீழ் கட்சி சார்பற்ற பதவி என்றே கருதப்படுகிறது.
தற்போது சண்முகரத்தினம் தெரிவானதை அடுத்து 2017ல் இருந்து ஜனாதிபதி பொறுப்பில் இருக்கும் Halimah Yacob பதவி விலக உள்ளார்.
தற்போது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள தர்மன் சண்முகரத்தினம் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.